ADVERTISEMENT

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு... மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த மாநகராட்சி..

04:32 PM Sep 15, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் அலிமா வயது 35. இவரது கணவர் ஷேக் அப்துல் மற்றும் ஒரு மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவர் புளியந்தோப்பு நாராயணசாமி தெரு பகுதியில் உள்ள சாகிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு அலிமா வீட்டு வேலை செய்வதற்காக நாராயணசுவாமி தெரு வழியாக சென்றுகொண்டு இருந்தார். அப்போது மழை பெய்து சாலையின் நடுவே தண்ணீர் நின்றதால் ஓரமாக சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவத்தில் 2 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உதவி மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கடராமன் ஆகியோரை மாநகராட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் தெருவிளக்குகளும் 7,220 மின் பெட்டிகளும் இவற்றை பராமரிக்க பொறியாளர்களும் உதவி பொறியாளர்களும் மற்றும் பணியாளர்கள் 700 பேர் நாள்தோறும் பணியாற்றி வருகிறார்கள். 200 வார்டிலும் மின் கசிவோ பழுதோ எதுவும் இல்லை என பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT