ADVERTISEMENT

கணவருக்கு மதுவில் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம்... மனைவி கைது...

12:33 PM Sep 16, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் 40 வயதான இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்தாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் ஆனந்தன் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார்.

இந்த நிலையில் நேற்று இரவு சத்யாவின் உறவினர் சீனிவாசன் என்பவர் ஆனந்தனுக்கு போன் செய்து திருநாவலூர் அடுத்த கெடிலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி வீட்டில் இருந்த ஆனந்தன் இரவு சுமார் 9-மணியளவில் மதுக்கடைக்கு சென்றபோது, அங்கு இருவரும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள முட்புதரில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். ஆனந்தன் போதை அதிகமானதால் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார். ஆனால், சீனிவாசன் அங்கிருந்து அதே இடத்தில் ஆனந்தனை விட்டு விட்டு சென்றுள்ளார்.

அதன்பின் ஆனந்தன் மது அருந்திய இடத்திலேயே மயக்க நிலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கடந்துள்ளார். இரவு சுமார் 10-மணி அளவில் அந்த வழியாக வந்தவர்கள் ஆனந்தனை பார்த்து தூக்கிக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆனந்தன் மது போதையிலேயே உயிரிழந்தார் இதனால் சீனிவாசன் மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஆனந்தனை கொலை செய்திருக்கலாம் என ஆனந்தனின் சகோதரர் காசிநாதன் காளி, திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் ஆனந்தனின் உடலை கைப்பற்றிய திருநாவலூர் போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனந்தன்

இதுகுறித்து ஆனந்தன் மரணம் தொடர்பாக சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை பிடித்து சீனிவாசனுக்கும் ஆனந்தன் மனைவிக்கும் முறையற்ற தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் அதனால் திட்டமிட்டு சீனிவாசன், ஆனந்தனை வரவழைத்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்ட நிலையில் திருநாவலூர் போலீசார் ஆனந்தனின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 13-ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஆனந்தன் தனது ஊரிலிருந்து கிளம்பி சென்றபோது தனது நண்பர்களிடம் எனது சகலை மது அருந்த அழைப்பதாகவும் அதற்காக கெடிலம் மதுக்கடைக்கு செல்கிறேன் எனவும் கூறிச்சென்றதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து கீதாவிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ஜீப்பில் அழைத்து சென்று அவரது தாய் மாமனான சீனிவாசனை அடையாளம் காட்டச் சொல்லியுள்ளனர். அங்கு எதுவுமே நடக்காததுபோல் சர்வ சாதாரணமாக இருந்த சீனிவாசனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதோடு ஆனந்தனின் செல்போன் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்து உறுதிபடுத்தியதை அடுத்து இருவரையும் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, திருமணத்திற்கு முன்பிருந்தே தங்களுக்குள் உறவு இருந்ததாகவும் ஆனந்தன் லாரி டிரைவர் என்பதால் கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு சென்றுவிட்டு 15- நாட்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து இரண்டு, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வேலைக்கு சென்று விடுவார் எனவும் நாங்கள் அப்பொழுதெல்லாம் தனிமையில் சந்திப்போம் எனவும் கரோனா ஊரடங்கால் ஆனந்தன் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் தாங்கள் தனிமையில் சந்திக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் கொலை செய்ய திட்டம் தீட்டி கடந்த 13-ஆம் தேதி இரவு கெடிலம் மதுபானக் கடைக்கு ஆனந்தனை வரவழைத்து முதலில் ஒரு குவாட்டர் மதுவை குடிக்கச் செய்து. இரண்டாவது குவாட்டரை உடைத்து கொடுத்து குடிக்கச் செய்த சீனிவாசன் பாதி மதுவை குடித்ததும் மீதியுள்ள மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

சீனிவாசன்

அதன் பிறகும் சற்று நிதானமாக இருந்த ஆனந்தனுக்கு தன்னுடைய மதுவில் 90 மில்லி ஊற்றி கொடுத்துள்ளார். அப்போது மதுவில் கலந்த விஷம் உடலில் பரவத் தொடங்கியதும் மயங்கி விழுந்த ஆனந்தனை அவரது ஊரின் எல்லையில் உள்ள சாலைவரை தோளில் தாங்கி பிடித்தவாறு அழைத்து சென்று சிறிய பாலத்தின் மீது கிடத்தி விட்டு அருகே பாதி மதுவுள்ள குவாட்டர் பாட்டில் மற்றும் கால் பாட்டில்களை வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் சீனுவாசன் தாங்கள் திட்டம் தீட்டி கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒருபுறம் தந்தை ஆனந்தன் கொலை செய்யப்பட்ட நிலையில் மறுபுறம் தாய் சத்திய முறையற்ற உறவு விவகாரத்தில் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற நிலையில் தற்போது இவர்களின் இரண்டு குழந்தைகளும் நிர்கதியாய் நிற்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT