நெல்லை மாவட்டத்தில் செங்கல் சூளை தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், பனங்குடி அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி. செங்கல் சூளை தொழிலாளியான இவர் கடந்த 13ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் குருசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். குருசாமியின் மனைவி ஜெயந்திக்கும், சமாதானபுரத்தைச் சேர்ந்த செந்திலுக்கும் கள்ளத் தொடர்பு என கூறப்படுகிறது.
இதையடுத்து செந்திலை மடங்கிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். காதலுக்கு இடையூறாக குருசாமி இருந்ததால், அவரை செந்தில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து செந்திலை போலீசார் கைது செய்தனர்.