ADVERTISEMENT

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

01:30 PM Nov 18, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிப் பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும், மிக கனமழை எந்தெந்த மாவட்டங்களில் பெய்யும் உள்ளிட்டவை குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நவம்பர் 20 ஆம் தேதி அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 21 ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும், நவம்பர் 22 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 21 ஆம் தேதி அன்று திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி அன்று சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று வங்கக்கடலின் தென்மேற்கு, மத்தியப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். நாளை (19/11/2022) வங்கக்கடலின் தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு- புதுச்சேரி மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளி வீசும். மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT