ADVERTISEMENT

தபால் வாக்குகள் உரிய இடங்களுக்குச் செல்கிறதா என்பதில் சந்தேகம் எழுகிறது? - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி!

09:51 PM Mar 25, 2021 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 100 சதவீத தபால் வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நடந்தது. கூட்டணியின் மாநிலத் தலைவர் குன்வர்ஜோஸ்வா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தபால் வாக்குப்பதிவு தொடர்பாக தமிழகத் தேர்தல் ஆணையருக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டது.


இது தொடர்பாக பேசிய கூட்டணியின் மாநிலத் தலைவர் குன்வர்ஜோஸ்வா, "தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்குப் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 100 சதவீத தபால் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய முன்வரவேண்டும். தேர்தல் பணிக்கு வரும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தபால் வாக்கைச் செலுத்தி விடுகின்றனர். ஆனால், வாக்கு எண்ணும் மையங்களில் குறைந்த சதவீத வாக்குகளே பதிவாகி வருகின்றது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் (அஞ்சல் பெட்டி மூலம் அனுப்பப்படும்) தபால் வாக்குகள் முறையாக வாக்கு என்னும் இடங்களுக்குச் செல்கிறதா என்பதில் சந்தேகம் எழுகிறது. எனவே சாதாரண அஞ்சல் பெட்டி மூலம் தபால் வாக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தபால் வாக்குகள் பெறப்படும் அலுவலகங்களில் தபால் வாக்குகள் பதியப்பட்டு ரசீது வழங்கப்பட வேண்டும். தபால் வாக்குகளுக்கான உரிமைகளை தேர்தல் ஆணையமே வழங்கும்போது தபால் வாக்குகளில் கெஜட் அதிகாரி கையெழுத்து கட்டாயம் என்பதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்திக் கடிதம் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT