ADVERTISEMENT

'டி23' எங்கே...? தளர்த்திய வனத்துறை... மக்களுக்கு எச்சரிக்கை!

05:44 PM Oct 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவந்த 'டி23' புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணி 14 ஆவது நாளாக வனத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், தற்பொழுது புலியைப் பிடிக்கும் பணி தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் புலியைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருந்தாலும் வனத்துறை மயக்க ஊசி செலுத்தியே புலியைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் புலி மசினகுடியின் சிங்காரா வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக வனத்துறை தெரிவித்திருந்தது. அதனையடுத்து கும்கி யானைகளை வைத்து புலியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதனைக் கைவிட்டு, காடுகளில் மரங்கள் மேல் பரண் அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதேபோல் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கேமராவில் புலியின் நடமாட்டம் இல்லாததால் பரண் அமைத்துத் தேடுதல் நடத்தும் முறையை வனத்துறை கைவிட்டுள்ளது. முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினரை விடக் குறைந்த பணியாளர்களே தற்பொழுது புலியைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

ஒருவேளை மீண்டும் புலி கூடலூர் பகுதிக்கே சென்றிருக்கலாம் எனச் சந்தேகித்துள்ள வனத்துறை, 'டி23' உணவு சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆவதால் மீண்டும் கால்நடைகளை வேட்டையாட வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு மீண்டும் வரலாம் எனவே அதுவரை புலியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் வனத்தை ஒட்டிய பகுதிகளுக்குக் கால்நடைகளை மேய்க்கச் செல்லவேண்டாம் என வனத்துறை அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்புலி இதுவரை நான்கு பேரையும், 30க்கு மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT