ADVERTISEMENT

“சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” - விடுதலை சிறுத்தைகள் கட்சி

10:38 AM Jan 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புத்தாண்டின் முதல் சட்ட மன்ற கூட்டத்தொடர் கவர்னர் ஆர்.என். ரவியின் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. கவர்னர் உரையாற்றத் துவங்கியதுமே, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படாததை கண்டித்து பேரவையிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு குறித்து அவர்கள் கூறும் போது “அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021-யை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டப் பேரவையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT