ADVERTISEMENT

தடம்மாறும் எட்டுவழி சாலை... தற்காலிக நிறுத்திவைப்பு!!

06:43 PM Sep 14, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதி சிவஞானம் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் " வழித்தடத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நில கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் திட்டத்தை இறுதி செய்யும் வரை நில ஆர்ஜித நடவடிக்கைகள் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
இதையடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில் சென்னை சேலம் இடையில் அமைய உள்ள சாலைக்கு அருகில் 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாகவும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப் பின்னணி குறித்து கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும், மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT