ADVERTISEMENT

தண்ணீரை சேமிக்க வேண்டும் - கிரண்பேடி வேண்டுகோள்!

05:39 PM Oct 28, 2019 | rajavel

ADVERTISEMENT

புதுச்சேரி பாகூர் அருகே குருவிநத்தம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி அணைக்கட்டு பகுதியை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டார்.

ADVERTISEMENT

பின்னர் ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி அவர் நடை பயணத்தை தொடங்கினார். 7 கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்ட கிரண்பேடி மணப்பட்டு தாங்கல் ஏரிப்பகுதியில் நடைபயணத்தை நிறைவு செய்தார்.


நிகழ்ச்சியின் போது பேசிய கிரண்பேடி, “புதுச்சேரியில் 19 வாய்க்கால்கள் சி.எஸ்.ஆர்.நிதியின் மூலமாக தூர்வாரப்பட்டுள்ளன. இதில் 7 வாய்க்கால்கள் கிராமப்புறங்களிலும், 12 வாய்க்கால்கள் நகர பகுதியிலும் உள்ளன.

இன்றைய தினம் தூர்வாரி முடிக்கப்பட்ட சித்தேரி வாய்க்காலை முழுமையாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இது உடற்பயிற்சி என நினைக்க வேண்டாம். நீர் நிலைகளை பாதுகாத்திடவும், தண்ணீரை சேமித்திட வேண்டும் என்பதும் நமது நோக்கம். அடுத்த மாதம் (நவம்பர்) 4-ஆம் தேதி புதுச்சேரி ராஜ் நிவாசில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பிற்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளது. இதில் பொது மக்களும் பங்கேற்கலாம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT