ADVERTISEMENT

அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

02:21 PM Jun 20, 2019 | kamalkumar

தமிழ்நாடு தண்ணீருக்காக அலைந்துகொண்டிருக்கிறது. மழையும் பொய்த்துவிட்டது, இது சென்னையின் பிரச்சனை மட்டுமில்லை, தமிழ்நாடு முழுக்க இதே பிரச்சனைதான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் திறக்கப்படாததும் காரணமானது. சென்னையின் தண்ணீர் தேவையை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து திருட்டுத்தனமாக தண்ணீரை உறுஞ்சுகின்றன அதை 8000, 10,000 என விற்கின்றன. தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் அந்த கிராமங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என எழுதிப்போடாததுதான் மிச்சம் அவ்வளவு வறட்சி இருக்கிறது. அடுத்த ஆண்டு சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் சுத்தமாக இருக்காது என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படியாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள் முதல் பொதுக்கழிப்பறை வரை அனைத்தும் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அமைச்சர் வேலுமணி, தண்ணீர் பஞ்சம் என்பது பொய் பிரச்சாரம், இங்கு தண்ணீர் பஞ்சம் இல்லை. மூடப்பட்ட கடைகளும், ஐ.டி. நிறுவனங்களும் தண்ணீர் இல்லாததால் மூடப்படவில்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை கிரீன் வேஸ் சாலையில் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களின் வீடு இருக்கிறது.

தினமும் அங்கு இரண்டு லாரிகளில் சென்னை மெட்ரோ தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. இரண்டு தானே என நினைக்கவேண்டாம் ஒரு லாரி என்பது 12000 லிட்டர் தண்ணீரைக் கொண்டது. இரண்டு லாரிகள் என்பது 24000 லிட்டர் தண்ணீர் அங்கு இருப்பது மொத்தமே 35 அமைச்சர்களின் குடும்பங்கள்தான். இந்த ஒரு லாரி தண்ணீர் பொதுவான பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள்தான் செல்லும். அதிலும் மெட்ரோ தண்ணீரை தனியாருக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைக்கும் ஓட்டுநர்களால் அதுவும் செல்வதில்லை. தண்ணீர் இப்படியாக இருக்கும்போது இவ்வளவு தண்ணீர் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல்தான் அரசு உயர் அதிகாரிகள் மற்ற அமைச்சர்கள் வீட்டிற்கும் செல்கிறது. மாட்டை குளிப்பாட்டுவது முதல் அனைத்து வேலைகளையும் இந்த மெட்ரோ நீர் மூலம்தான் செய்கிறார்கள் என்ற பேச்சு அந்தப் பகுதியில் எழுந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT