ADVERTISEMENT

ஸ்கூட்டியில் வாக்கு இயந்திரம்... மாநகராட்சி ஊழியர்கள் நான்கு பேருக்கு போலீசார் சம்மன்!

11:21 AM Apr 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று முன்தினம் (06.04.2021) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று இரவு வேளச்சேரியில் (நந்தினி மருத்துவமனை அருகில்) 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதாகப் புகார் எழுந்த நேரத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்தனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தியுள்ள நிலையில், ஸ்கூட்டரில் தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த தகவலை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல. பழுதான 2 விவி பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் விளக்கமளித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மாநகராட்சி ஊழியர்களுக்குப் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மெட்ரோ குடிநீர் உதவிப்பொறியாளர் செந்தில்குமார், மேஸ்திரி வெளாங்ககண்ணி, ஊழியர்கள் துளசிங்கம், வெங்கடேசன் ஆகிய நான்கு பேரும் நேரில் ஆஜராகும்படி வேளச்சேரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT