தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கோவை மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்பொழுது கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, எஸ்.பி மகேஸ்வரன் ஆகிய இருவரும் தேர்தல் அல்லாதபணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுதைய கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், போலீஸ் எஸ்.பியாக ஷஷாங் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை காவல் துணை ஆணையராக ஜெய்சந்திரனைநியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.