ADVERTISEMENT

சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; அதிகாரிகள் விசாரணை

04:15 PM Jun 23, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று மதியம் வழக்கம் போல் சத்துணவு கூடத்தில் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் திடீரென 18 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் மாணவர்களைப் பரிசோதித்ததில் கீரை மற்றும் முட்டை வழங்கப்பட்ட நிலையில் அவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. சிகிச்சையில் உள்ள மாணவர்களில் இரண்டு மாணவர்களுக்கு ஒரு செவிலியர் என நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர். டிஎஸ்பி கீர்த்திவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். போலீசாரும் பள்ளியில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT