ADVERTISEMENT

ஜெ., மரணம் விசாரணை - 2வது முறையாக விவேக் ஆஜர்!

12:26 PM Mar 09, 2018 | Anonymous (not verified)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இளவரசி மகன் விவேக் இன்று 2-வது முறையாக ஆஜரானார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், செயலாளர் வெங்கடரமணன், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, அரசு டாக்டர் பாலாஜி, அப்பல்லோ டாக்டர்கள், ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இளவரசி மகனும் ஜெயா டி.வி.யின் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஏற்கனவே கடந்த மாதம் 13-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்நிலையில் விவேக் இன்று மீண்டும் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்று காலை விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விவேக் விளக்கமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT