ADVERTISEMENT

அடிப்படை வசதிக்கு ஏங்கும் சதுரகிாி பக்தா்கள்

05:11 PM Jan 26, 2019 | manikandan

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூா் அருகே உள்ளது சதுரகிாி மலை. இங்கு பிரசித்த பெற்ற சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் மற்றும் சுந்தரமூா்த்தி என மூன்று சிவன் கோவில்கள் உள்ளன. இதில் சந்தன மகாலிங்கம் கோவிலை பலநூறு ஆண்டுகளுக்கு முன் 18 சித்தா்கள் வணங்கி வழிப்பட்டதாக கோவில் வரலாறு கூறுகிறது.

ADVERTISEMENT

ஏழு மலைகளை கடந்து உச்சியில் இருக்கும் இந்த கோவிலுக்கு தாணி பாறையில் இருந்து நடந்து செல்ல வேண்டும். வனத்துறை அனுமதியுடன் இங்கிருந்து கரடு முரடான மலையில் 8 கி.மீ சுமாா் 3மணி நேரம் நடக்க வேண்டும். அதுவே வயதானவா்கள் குழந்தைகள் என்றால் 6 மணி ரேம் கூட ஆகலாம். இங்கு வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவா்கள், இளைஞா்கள், இளம் பெண்கள் மற்றும் வயதானவா்கள் என எல்லோரும் செல்கிறாா்கள்.

இங்கு மாதத்துக்கு 10 நாட்கள் தான் பக்தா்களை அனுமதிக்கிறாா்கள். அது பெளா்ணமிக்கு 5 நாட்கள் மற்றும் அமாவாசைக்கு 5 நாட்கள் தான் மற்ற நாட்கள் அங்கு யாரும் செல்ல மாட்டாா்கள் அனுமதியும் இல்லை. அதே போல் மாலை 4 மணிக்கு மேல் செல்ல அனுமதியில்லை. இந்த 10 நாட்களில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் கோவிலுக்கு வருகிறாா்கள். இந்த சூழ்நிலையில் மலை கற்களுக்கிடையில் கையில் கம்பை ஊன்றிய படி செல்லும் பக்தா்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு வசதியும் இல்லை. கால் கொஞ்சம் தடுமாறினால் பள்ளத்தில் தான் விழ வேண்டியிருக்கும்.

குறிப்பாக தாகம் எடுத்தால் குடிப்பதற்கு தண்ணீா் இல்லை. வழியில் மூன்று இடங்களில் மட்டும் தண்ணீா் தொட்டி வைத்திருக்கிறாா்கள். அதில் சொட்டு சொட்டாக தண்ணீா் வருவதால் ஓரு கப் தண்ணீா் பிடிக்க கால் மணி நேரம் ஆகிறது. இதே போல் மலையேறும் பக்தா்களுக்கு மூச்சு திணறலோ மற்றும் வேறு விதமான உடல்நிலை கோளாறு ஏற்பட்டாலோ முதலுதவி செய்ய மருத்துவ முகாம் கூட இல்லை. மேலும் பெண்களுக்கு ஓன் பாத்ரூம் போக கூட இடம் இல்லை அவா்கள் வெட்கத்தையும் கூச்சத்தையும் விட்டு மலைக்குள் மறைவை தேடி செல்கிறாா்கள்.

செல்லும் வழியில் தான் இந்த பிரச்சினை என்றால் கோவிலுக்கு சென்ற பிறகும் இதே நிலை தான். அங்கு கட்டப்பட்டியிருக்கும் ஓய்வறை கூட பூட்டியே தான் கிடக்கிறது. இதனால் பாறைகளில் படுத்து ஓய்வெடுத்து கொள்கிறாா்கள். பெயருக்கு இரண்டு பாத்ரூம் மட்டும் இருக்கிறது. அங்கு நீண்ட வாிசையாக தான் உள்ளது. அதே போல் குளித்து விட்டு உடை மாற்றக்கூட தனி அறை இல்லை.

எந்த நேரமும் அன்னதானம் கிடைப்பதால் வயிற்று பசிக்கு எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் முக்கிய மான அடிப்படை வசதிகள் தான் குறையாக இருக்கிறது. இது அங்கு செல்லும் எல்லா பக்தா்களுக்கும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து பக்தா்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று எதிா் பாா்க்கிறாா்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT