ADVERTISEMENT

திருட்டு மணல் டிராக்டரை விரட்டிப்பிடித்த சிவகாசி சப்-கலெக்டர்!

03:07 PM Nov 05, 2019 | santhoshb@nakk…

திருவில்லிபுத்தூர் வட்டம்- திருவண்ணாமலை பகுதியில் தனது குழுவினருடன் இன்று மணல் கடத்தல் தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார் சிவகாசி சார்-ஆட்சியர் தினேஷ்குமார். அப்போது, மங்காபுரத்தைச் சேர்ந்த வைரம் என்பவரின் வாகனத்தைச் சோதனை செய்தனர். அவர் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு வாகனத்தைக் கைப்பற்றினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மற்றொரு வாகனத்தின் டிரைவர் சார்-ஆட்சியரைக் கண்டதும் தப்பிக்க முயன்றார். இதைக்கண்ட சார்-ஆட்சியர் தினேஷ்குமார், தன்னுடைய வாகனத்தில் விரட்டிச் சென்றார். சினிமா போல, 3 கி.மீ. தூரத்துக்கு இந்தச் ‘சேஸிங்’ நடந்தது. பாதை சீரற்ற நிலையில் இருந்ததால் விரட்டப்பட்ட வாகனம் கவிழ்ந்தது. டிரைவர் வாகனத்தைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார். விசாரணையில், கவிழ்ந்த வாகனம் பவுன் என்பவருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டுபிடித்தனர். இரு வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், மணல் திருட்டில் ஈடுபட்ட வேலையாட்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் தினேஷ்குமார் இ.ஆ.ப.




Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT