விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்புதான் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் விருதுநகர் அருகே மூலிப்பட்டியில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.