ADVERTISEMENT

வளர்ச்சி பாதையை நோக்கி செல்லாத விருத்தாலசம்!

10:25 AM Oct 30, 2018 | sekar.sp



விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி கடந்த நான்கு முறையாக எதிர்கட்சி வசம் இருப்பதால் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல முடியாமல் பின்னோக்கியே உள்ளது.

ADVERTISEMENT

விருத்தாசலம் மாவட்ட தலைமையிடமாக வர அனைத்து தகுதிகள் இருந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை வைக்கப்பட்ட பெண்கள் கல்லூரி வரவில்லை. செராமிக் தெரழிற்பேட்டை அரசு முழு அதரவு இல்லாமல் வாளர்ச்சி அடையவில்லை. செராமிக் தொழில் நுட்ப கல்லூரியில் கூடுதலாக பொறியியல் கல்லூரி கொண்டு வரலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டு கொண்டுவரப்படவில்லை.

ADVERTISEMENT

வேளான் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளான் கல்லூரி கொண்டு வரலாம் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்தப் பகுதியில் மணிலா அதிகம் என்பதால் மணிலா எண்ணெய் பிழியும் ஆலை இருந்தது. அது மூடிய பின்பு திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிரசித்த பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயம் கொளஞ்சியப்பர் ஆலயங்கள் இருந்தும் வெளியே தெரிய வைக்க முயற்சி செய்யப்படவில்லை. தொன்மை வாய்ந்த மணிமுத்தாற்றில் என்.எல்.சி. நீர் கொண்டு வந்து தடுப்பனை கட்டலாம். இப்போது நகர கழிவுகாலால் சாக்கடையாக உள்ளது.

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. சேலம் - கடலூர், சென்னை மதுரை நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் அரசு மருத்துவமனைக்கு தான் வரவேண்டும். அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால் கடலூர் விழுப்புரம் பாண்டி செல்லம் வேண்டிய நிலையில் பல உயிர் இழப்புகள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பார்வை விழுந்தால் விருத்தாசலம் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT