ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம்!

08:42 AM Sep 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி இல்லாத நிலையில் வீடுகளிலேயே கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் உற்சவமூர்த்தி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமங்கலி நகர் பகுதியில் பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து இளைஞர்கள் வழிபட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் விநாயகர் சிலையை வைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், இந்து முன்னணி அமைப்பினர் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை. மாணிக்க விநாயகருக்கு 30 கிலோ, உச்சிப்பிள்ளையாருக்கு 30 கிலோ என 60 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படும். பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் குறைந்த அளவிலான விநாயகருக்கு படைக்கப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT