vinayagar chaturthi celebration in india temples peoples

Advertisment

நாட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் எளிமையாக கொண்டாடப்படுகிறது.

பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில்களில் விநாயகருக்கு அர்ச்சகர்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். தமிழகத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்திக்காக பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் செல்லவோ அனுமதியில்லை. வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரையைத் தவிர்த்து பிற நீர் நிலைகளில் கரைக்கலாம்.

Advertisment

vinayagar chaturthi celebration in india temples peoples

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் வழிபட்டனர். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் மாஸ்க் அணிந்த பக்தர்கள் 20 பேர் வீதம் கோயிலில் அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு பூஜைகள் இல்லாத நிலையில் மூலவர்; உற்சவரை மட்டுமே வழிபட பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.