Skip to main content

டிச.20ல் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

Christmas celebration admk party

அ.தி.மு.க. சார்பில் டிசம்பர் 20- ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறும் என்று அ.தி.மு.க. கட்சியின் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். தெரிவித்துள்ளனர். 

 

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் டிசம்பர் 20- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறும். அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன் கலந்துக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலந்துக்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்