ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு கோவில் காளை இறப்பு: சோகத்தில் கிராம மக்கள்

10:48 AM Aug 15, 2018 | rajavel


பல்வேறு பரிசுகளை குவித்த கோவிலில் வளர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்ததால் அக்கிராம மக்களே சோகத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ளது பிள்ளையார்நத்தம் கிராமம். இங்கு உள்ள நொண்டிசாமி கோவிலில் கிராமத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

18 வயதான இந்த காளை பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிகட்டில் பங்கேற்று தங்கம், வெள்ளி, காசுகளையும் மற்றும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு, குலமங்களம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களுக்கு சவால் விட்டு பெயரையும், புகழையும் பெற்றது.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கோவில் காளை உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தவர்கள் கோவில் காளை உடல் நலம் தேற மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கவனித்து வந்தனர். இருப்பினும் கோவில் காளை இறந்துவிட்டது. கிராமத்திற்கு பெருமை சேர்ந்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

நொண்டிசாமி கோவில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்றுவட்டார கிராம மக்கள் வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT