Skip to main content

''100 நாள் வேலை பார்த்து குடிக்கிற தண்ணிதான் வாங்குறோம்'' 15 கிராம மக்களின் ஆதங்கம்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

 "We only buy drinking water after working for 100 days"

 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் முதல்நிலை ஊராட்சியில் சுற்றியுள்ள 17 கிராமங்கள் இணைந்துள்ளது. பெருங்களூரில் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளதால் வெளியூர்களில் இருந்து பணிக்காக வந்தவர்களும் தங்கியுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் குடிதண்ணீர் தொட்டிகளும் ஆழ்குழாய் கிணறுகளும் உள்ளன. போதிய அளவு தண்ணீரும் கிடைக்கிறது. ஆனால் இத்தனை கிராமங்களில் மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி ஆகிய இரு கிராமங்களைத் தவிர மற்ற 15 கிராமங்களிலும் கிடைப்பது உப்புத் தண்ணீர் மட்டுமே. பாதி உப்புத் தண்ணீரோடு காவிரி தண்ணீரும் கலக்கும்போது எல்லாமே உப்பாகவே போகிறது. இதனால் மீதமுள்ள 15 கிராம மக்களும் நல்ல தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். 

 

 "We only buy drinking water after working for 100 days"

 

குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள், ''நாங்க என்ன பாவம் செஞ்சோமோ தெரியல. காலம் பூராவும் உப்புத்தண்ணிதான் பயன்படுத்துறோம். இந்த தண்ணியைக் குடிக்கிறதால அடிக்கடி உடல்நலப் பிரச்சனைகளும் வருது. பலருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டிருக்கு. அதனால நாங்க நூறு நாள் வேலை பார்த்து, குடிக்கிறதுக்கும் சமைக்கிறதுக்கும் குடம் ரூ. 10க்கு தண்ணீர் வாங்குறோம். உப்புத் தண்ணியைக் குளிக்கவும் துவைக்கவும்தான் பயன்படுத்துறோம். எங்கள் கிராம மக்களுக்கு எப்பதான் நல்ல தண்ணி கிடைக்குமோ'' என்றனர்.

 

ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நல்ல தண்ணீர் கிடைக்க அமைச்சர் முதல்  அதிகாரிகள்வரை மனு கொடுத்து காத்திருக்கிறார்கள். ஊராட்சியின் மனுவுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து, நல்ல தண்ணீர் கிடைக்கும் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குழாய்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.