ADVERTISEMENT

நெய்வேலியில் கஞ்சா வியாபாரி காவல்துறைக்கு வீடியோவில் சவால்!!

08:02 AM Jun 18, 2019 | Anonymous (not verified)

கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனை காவல்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து தடுத்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் தான் கஞ்சா விற்பதாகவும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் வீடியோவில் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த வீடியோவில்,

ADVERTISEMENT


ADVERTISEMENT

"நான் பெங்களூர் மணி என்ற மணிகண்டன் பேசுகிறேன். நான் தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். இதனை தடுக்க நினைக்கும் சுரேஷ் என்பவரை கொலை செய்யப்போகிறேன். போலிசார் என்னை கைது செய்யமுடியுமா?" என கேள்வி எழுப்பியதுடன், கஞ்சா விற்றவர் மற்றும் கஞ்சா பயன்படுத்துபவர் என அனைவரும் சேர்ந்து எடுத்த வீடியோ தற்போது அதிகளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

இவ்வீடியோவில் பேசுபவர் பெங்களூரை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் என்றும், இவர் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் உள்ள ஒம் சக்தி நகரை சேர்ந்த பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரிலிருந்து நெய்வேலி வரும் போது, கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்து, தன்னுடைய சக நண்பர்களான தேவா உள்ளிட்டவர்களுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் என்பவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது சக நண்பர்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா போதையில் காவல்துறைக்கு சவால் விடும் வீடியோவை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த நெய்வேலி காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT