ADVERTISEMENT

நண்பனின் மனைவியை மயக்கியதால் மனைவி தந்த தண்டனை!

03:06 PM Sep 06, 2019 | Anonymous (not verified)


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் வசித்து வருபவர்கள் கபீர் அஹமத் மற்றும் இர்ஃபான் அஹமத் ஆகிய இருவரும் நண்பர்கள். கபீர் கத்தார் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வேலை பார்த்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இர்ஃபான் அஹமத்துக்கு திருமணமாகியுள்ளது. வேலைக்கு எங்கும் செல்லாமல் குடும்பத்தை நடத்த தடுமாறியதால் கணவன் – மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் உள்ள தனது நண்பன் கபீர் அஹமத்திடம் அந்நாட்டில் ஏதாவது வேலை வாங்கி தாடா எனக்கேட்டுள்ளார். சரியென்றவர், 3 மாதத்திற்கான சுற்றுலா விசா வாங்கி இர்ஃபான் அஹமதுக்கு கபீர் அனுப்பி வைத்துள்ளார். அதில் இர்ஃபான் அஹமத் கத்தார் நாட்டுக்கு வேலை தேடி சென்றுள்ளார். நண்பனை தனது வீ்ட்டிலேயே தங்க வைத்த கபீர் அஹமத், நண்பனுக்காக வேலை தேடி வந்துள்ளார்.

நண்பனின் வீட்டில் தங்கியிருந்தபோது, கபீர் அஹமத் மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தகாத உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியடைந்த இர்ஃபான், நண்பனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென நினைத்து, கபீர் அஹமத் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இர்ஃபான் அஹமத்தை அழைத்துக்கொண்டு இந்தியா அழைத்து வந்துள்ளார்.

நண்பனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இர்ஃபான் அஹமத் விமான நிலையத்திற்கு வந்ததும் தலைமறைவாகியுள்ளான். எப்படியும் அவன் வாணியம்பாடி வந்து தானே ஆகவேண்டுமென கபீர் தனது குடும்பத்தோடு வாணியம்பாடி வந்து தனது வீட்டில் தங்கியுள்ளார்.

கபீர் அஹமத், இர்ஃபான் வீடிற்கு சென்று கத்தார் நாட்டில் நடந்ததை அவரது மனைவியிடம் சொல்லி, அவன் வந்தால் அவனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனச்சொல்லியுள்ளார். அதோடு, இதுப்பற்றி தனது உறவினர்கள் மற்றும் ஜமாத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

என்னை என்ன செய்துவிட முடியும் என தனது வீட்டுக்கு வந்த இர்ஃபானை கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி உறவினர்கள் கபீரிடம் ஒப்படைத்தனர். வீ்ட்டின் ஒரு அறையில் வைத்து இர்ஃபானை, கபீர் அஹமத் நாள் முழுவதும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று இர்பான் அவரது மனைவி கையால் செருப்பால் அடிக்க வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த செருப்பால் அடிக்கும் காட்சியை செல்போனில் படம் பிடித்த கபீர், இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடக்கக் கூடியவர் என்று சமூக வலை தளங்களில் பரப்பி உள்ளார். இதனால் இவரை பொதுமக்கள் செருப்பால் அடித்ததாக தகவலை மாற்றி பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து இர்பான் அஹமத் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதுப்பற்றிய விசாரணையில் தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகவும் எது உண்மை, எது பொய் என விசாரணை நடத்தும் போலிஸார், இந்த வழக்கை எப்படி முடிப்பது என மேல் அதிகாரிகளிடம் ஆலோசனையும் நடத்திவருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT