ADVERTISEMENT

தரமற்ற செங்கற்களால் கட்டப்படும் அரசு அலுவலகம்!! போராட்டத்தில் இறங்க கம்யூனிஸட் கட்சி முடிவு !!

06:08 PM Jul 06, 2018 | Anonymous (not verified)

கடலூர் மாவட்டம் புவனகிரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புவனகிரி வட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில் புவனகிரி, சேத்தியதோப்பு, பரங்கிப்பேட்டை குருவட்டங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போதைக்கு வட்டாட்சியர் அலுவலகம் இல்லாததால் புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடுமையான இடநெருக்கடியில் வருவாய் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை தினம் தினம் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழக அரசு ரூ 2.39 கோடியில் புவனகிரி வட்டத்திற்கு புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படும் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி புவனகிரி அருகே பு.ஆதிவராகநத்தம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்ட தரமற்ற செங்கல்கள் பயன்படுத்த படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.


ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தம் தலைமையில் மாவட்டசெயற்க்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், மணவாளன், கதிர்வேல், கோவிந்தராஜ், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்று கட்டடம் கட்ட இறக்கி வைக்கப்பட்ட செங்கல்லை பார்வையிட்டனர். அதில் பல செங்கல்கள் வேகா கல்லாக உள்ளதை அறிந்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் கூறியுள்ளர்.


இதுகுறித்து சதானந்தம் கூறுகையில்,

பிரமாண்டமாக அமையவுள்ள இந்த வட்டாட்சியர் அலுவலகம் தரமற்ற வேகா செங்கல்லை கொண்டு கட்டப்படுகிறது. எனவே அதிகாரிகள் நேரில் வந்து அனைத்து செங்கல்லையும் ஆய்வு செய்து தரமான கல்லை கொண்டு கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் புவனகிரி பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந்த புகார் குறித்து பொதுப்பணித்துறை கட்டிடபிரிவின் உதவி பொறியாளர் சிவசங்கரநாயகி கூறுகையில், செங்கல்லை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தரமாக உள்ளதாக கூறுகிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT