Anganwadi workers' struggle to continue for 3rd day ...!

Advertisment

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 22ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. அவர்களது கோரிக்கைகளான, “அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்க வேண்டும்.

பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்” உள்ளிட்ட6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 22 ம்தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் காத்திருப்பு போராட்டம்தொடங்கியது.

அதன்படி மாவட்டத்தில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் காத்திருப்பு போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் போராட்டக் களத்திலேயே இரவு முழுவதும் கடும் பனியைக் கூடபொருட்படுத்தாமல் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள காலி இடத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

Advertisment

Anganwadi workers' struggle to continue for 3rd day

அதில் அவர்கள் இரவு தூங்கினர். இந்நிலையில் 24ம்தேதி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களின்காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேரம் செல்ல செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்தும் அங்கன்வாடி ஊழியர்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்குப் போராட்டக் களத்திலேயே உணவு வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதே ஈரோடு தாலுகா அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையைரூபாய் 3 ஆயிரமாகவும்,கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்;தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்ளிட்டகோரிக்கையை வலியுறுத்திமாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களாக இரவு கடும் பனியைக் கூட பொருட்படுத்தாமல் விடிய விடிய குடியிருப்பு போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.