எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி சி.பி.எம். வி.சி.க. மற்றும் தலித் அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக எஸ்சி / எஸ்டி மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாக உள்ள கடலூர் மாவட்டத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சிலஅமைப்புகளும் கடலூர் மாவட்டத்தை கோட்டை என்று சொல்லிக்கொள்ளும். ஆனால் அவர்களை பாதுகாக்கும் போராட்டத்தில் அதிகளவு கலந்து கொள்ளவில்லை என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது என்கிறார் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுசிந்தனையுடைய ஒருவர்.
கடலூரில் ரயில் மறியல்
Advertisment