ADVERTISEMENT

வெள்ளப் பாதுகாப்பு பணியில் இருந்த வி.ஏ.ஓ உதவியாளர் மீது தாக்குதல்!  

12:16 PM Aug 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ளப்பெருக்கு வருவதையொட்டி பொதுமக்கள் ஆற்றிற்கு செல்லாமல் தடுக்கும் பொருட்டு வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று, குளித்தலை கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் ரத்தினம் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சுற்றுலா பயணிகளான கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காவிரி ஆற்றிற்கு குளிக்க வந்துள்ளனர். அப்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் உள்ளே செல்ல வேண்டாம் என ரத்தினம் அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் ரத்தினத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு அந்த வாக்குவாதம் கைகலப்பாகி சுற்றுலா வந்தவர்களில் இருவர் ரத்தினத்தை தாக்கியுள்ளனர்.

உடனே அங்கிருந்த மக்கள் தாக்குதலில் காயம் அடைந்த ரத்தினத்தை மீட்டுக் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் ரத்தினத்தை தாக்கியது சுற்றுலா பயணிகளான சுப்பிரமணி, கோபாலகிருஷணன் மற்றும் இவர்களது தந்தை எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தந்தை, மகன்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வி.ஏ.ஓ உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT