/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-investication-logo_9.jpg)
கல்லூரி பேருந்தில் மாணவனின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இருவர் இடையே ஓடும் கல்லூரி பேருந்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக மாணவர் ஒருவர், உடன் பயின்று வந்த நிதிஷ்குமார் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த மாணவரின் அலறல் சத்தம் கேட்டு பேருந்தில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர்.
கழுத்தில் கத்தியால் குத்தியதில் காயமடைந்த மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர் நிதிஷ்குமாரை தாக்கிய திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்ற மாணவரை கைது செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)