Man arrested for hoarding 3,500 kg of ration rice in Karur

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையின் சார்பில் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி, மகேந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து காந்திகிராமம்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது காந்திகிராமம் சிவாஜி நகரில் ஒரு வீட்டின் முன்பு பதுக்கி வைத்திருந்த 3,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisment

மேலும், ரேஷன் அரிசி பதுக்கியதாக கரூர் ராமானுரைச் சேர்ந்த தினேஷ் என்பவரைக் கைது செய்து கரூர் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.