ADVERTISEMENT

காதல் மனைவி எரித்து கொலை!! கணவர் கைது... 

03:39 PM Aug 12, 2020 | rajavel

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ளது நைனார்பாளையம். இந்த கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் என்பவரது மகள் ராஜேஸ்வரி. வயது 18. இவர் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே கல்லூரியில் வி.பரங்கினி கிராமத்தைச் சேர்ந்த துறை என்பவரின் மகன் துளசிங்கம் என்கிற ஜீவா இவரும் அதே கல்லூரியில் மருந்தாளுனர் படிப்பு படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் நெருக்கமாகி காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் தனிமையிலும் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர்.

ADVERTISEMENT

பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வதற்கு முடிவு செய்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த உடன் இருவரும் அவரவர் பெற்றோரிடம் சம்மதம் கேட்டனர். இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். அப்புறம் என்ன காதலர்களாக இருந்த ராஜேஸ்வரிக்கும் துள சிங்கத்திற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் சம்மதத்துடன் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணம் முடிந்து சில நாட்கள் மட்டுமே இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். நாளடைவில் இருவருக்குக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வரதட்சணை கேட்டு துளசிங்கம் மனைவி ராஜேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார் அப்போது ஆத்திரமடைந்த துளசிங்கம் ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் இதில் ராஜேஸ்வரி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலரி துடித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ராஜேஸ்வரியின் உடல் முழுவதும் தீயில் கருகின. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ராஜேஸ்வரியை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் அண்ணன் முத்துராமன் வானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் துளசிங்கம் மீது கொலை கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி உடல்நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. கவலைக்கிடமாக இருந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜேஸ்வரியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விழுப்புரம் கோட்டாட்சியர் அவர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர் அதன் பேரில் கோட்டாட்சியர் ராஜேந்திரன் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டு மாதத்தில் வரதட்சனை கேட்டு பிரச்சனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் முழு விசாரணையில்தான் உண்மை தெரிய வரும் என்கிறார்கள் கிராமத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT