ADVERTISEMENT

வல்வில் ஓரி விழா: நாமக்கல்லில் ஆக. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை!

07:58 AM Jul 31, 2022 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில், சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையெழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3- ஆம் தேதிகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கொல்லிமலை பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 27- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. எனினும், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, வங்கிகளுக்கு பொருந்தாது.

கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைத் தலைவர்கள், அனைத்து பணியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT