kolli hills incident police investigation youth arrested

Advertisment

கொல்லிமலை அருகே காப்புக்காட்டுக்குள் நிர்வாணமாக பெண் சடலம் கைப்பற்றப்பட்ட வழக்கில், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டலினிநாடு அருகே உள்ள கீரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவருடைய மனைவி தீபா (27). இவர்களுக்கு 6 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 13- ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபா தனக்குச் சொந்தமான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். திடீரென்று அவை, காப்புக்காட்டுக்குள் நுழைந்ததால் அவற்றை விரட்டுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றார். அதன்பின் இரவு நெடு நேரமாகியும் தீபா வீடு திரும்பவில்லை.

Advertisment

கணவர் மற்றும் உறவினர்கள் தேடிச்சென்றபோது காப்புக்காட்டுக்குள் ஓரிடத்தில் தீபா நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார்.மர்ம நபர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது. உடலில் பல இடங்களில் காயங்களும் இருந்தன. இச்சம்பவம் குறித்து வாழவந்திநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். உடற்கூறாய்விலும் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் தீபா கொலை வழக்குத் தொடர்பாக கொல்லிமலை அருகே உள்ள பொல்லாகாட்டுப்பட்டி குண்டூர்நாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் ஜூலை 15- ஆம் தேதி கைது செய்தனர்.இந்தக் கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஆத்துக்காடு ஓடையில் தீபா குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவர் குளிப்பதை மறைந்து நின்று பார்த்துள்ளார்.

பின்னர் அவரை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அழைக்கவும் செய்திருக்கிறார். சிறுவனின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த தீபா, அவரைகன்னத்தில் அறைந்ததோடு, கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு விரட்டிவிட்டுள்ளார். இந்த நிலையில்தான், கடந்த 13- ஆம் தேதியன்றும் ஆத்துக்காடு ஓடைக்குத் தனியாக அழுக்குத் துணிகளைத் துவைப்பதற்காக வந்துள்ளார் தீபா. அதை மறைந்து இருந்து பார்த்திருக்கிறான் சிறுவன்.

Advertisment

அப்போது திடீரென்று கால்நடைகள் காப்புக்காட்டுக்குள் சென்றதால், அதை விரட்டுவதற்காக காப்புக்காட்டுக்குள் சென்றார் தீபா. ஏற்கனவே வாய்ப்புக்காக காத்திருந்த சிறுவன், தீபாவை தன் ஆசைக்கு இணங்குமாறு அழைத்திருக்கிறான். தனியாக மாட்டிக்கொண்டதை அறிந்த தீபா, கூச்சல் போட்டுள்ளார். அவர் சத்தம் போடாமல் இருக்க, அவரை தாக்கியதோடு, தீபா அணிந்திருந்த பாவாடையை கழற்றி வாயை இறுக்கமாகக் கட்டியுள்ளான் சிறுவன்.

http://onelink.to/nknapp

அதன்பிறகு அருகில் கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். அதன் பிறகே அந்தச் சிறுவன் தீபாவை பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார். அதன்பிறகு மீண்டும் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கிறார்.இதையடுத்து தீபாவின் செல்போனில் இருந்தே வெளியூரில் உள்ள தனது உறவினர் ஒருவருக்குத் தொடர்பு கொண்டு பேசிய அந்தச் சிறுவன், தான் தலைமறைவாகப் போவதாகச் சொல்லிவிட்டு செல்போனை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டான்.

தீபாவின் செல்போனைக் கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினர், அதில் பதிவாகியிருந்த எண்களின் அடிப்படையில் விசாரித்தபோதுதான் தீபாவைக் கொன்றது, உள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனும், தீபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.