ADVERTISEMENT

கூடா நட்பால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பு; கணவரை கொலை செய்த மனைவி ஆண் நண்பருடன் கைது 

05:24 PM Jul 09, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காட்டுமன்னார்கோவில் அருகே கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரிக் கரையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காந்தியார் நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(40) என்பவர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். எந்தவித துப்பும் கிடைக்காததால் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் காட்டுமன்னார்கோவில் காந்தியார் தெருவில் சக்திவேல், அவரது மனைவி தீபா(33) குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வில்வகுளம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுகுமார்(48) என்பவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு தின வசூல் செய்து வரும் நிலையில் தீபாவிற்கும் சுகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கூடா நட்பாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கோயம்புத்தூர் பகுதியில் வேலைக்குச் சென்ற சக்திவேல் திடீரென ஊருக்கு வந்துள்ளார். அப்போது மனைவி யாருடனோ பேசி வருவதாகச் சந்தேகமடைந்து அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீபா, கூடா நட்பில் இருந்த சுகுமாரிடம் கணவன் தன்னை சந்தேகப்படுவதாகவும் அவனைத் தீர்த்துக் கட்டினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 05.03.23 அன்று வீட்டில் போதையிலிருந்த சக்திவேலுவிடம் பணம் வசூல் செய்ய வேண்டும் உதவிக்கு வா என்று கூறி சுகுமார் காரில் அழைத்துக் கொண்டு வீராணம் ஏரிக் கரைக்குச் சென்று அங்கு சுகுமாரின் நண்பர்களுடன் மது அருந்த வைத்துள்ளனர். அதிக அளவில் போதையானதும் சக்திவேலுவின் முகத்தில் காரின் பிளாஸ்டிக் சீட் கவரை எடுத்து கட்டி மூச்சுத் திணறல் ஏற்படுத்தி அவரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது. இதையடுத்து நேற்று புத்தூர் போலீசார் சக்திவேல் மனைவி தீபா, சுகுமார் ஆகியோரை கைது செய்து கொலைக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் சுகுமாரின் நண்பர்கள் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT