
சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் வேளங்கிராயன்பேட்டை கிராமத்திலுள்ள தனியார் அனல் மின்நிலையத்திற்கு அருகில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சடலமொன்று மேலோட்டமாக புதைக்கப்பட்டிருந்தது. இந்த சடலத்தின்கைமட்டும் வெளியே தெரிந்ததைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து புதுச்சத்திரம் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சடலத்தைத் தோண்டி எடுத்து, சம்பவ இடத்திலேயே பிரேதப்பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சேத்தியாத்தோப்பு பெரியநற்குணம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ்(32) எனத் தெரியவந்தது. இவரது மனைவி பெயர் தீபா(25). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். சத்யராஜ் பால் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சத்தியராஜ் கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரது செல்ஃபோன்களை ஆய்வு செய்ததில் சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (29),சேத்தியாத்தோப்பு சக்திவிளாகம் பகுதியைச் சேர்ந்த அராத்து என்கிற வினோத் வயது (23),விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (18),விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த அருண் (20) மற்றும்விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது (18)உள்பட 5 பேர்களையும் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார்பிடித்து,புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்திய கார், 2 இரு சக்கர வாகனம் மற்றும் 5 செல்ஃபோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்ட சத்தியராஜின் மனைவி தீபாவுக்கும் ஜயப்பனுக்கும் தகாதஉறவுஇருந்துள்ளது. இதனை நேரடியாக பார்த்துவிட்ட சத்தியராஜ் இவர்களைக் கண்டித்துள்ளார். இந்தநிலையில் தான் மனைவி, காதலனுடன் இணைந்துசத்யராஜை நள்ளிரவில்கொலைசெய்து காதலனின்கூட்டாளிகளுடன் சேர்ந்து புதைத்தது, விசாரணையில் தெரியவந்தது.பின்னர், கொலை செய்யப்பட்டவரின் மனைவி தீபா உள்ளிட்ட காதலன்மற்றும் கூட்டாளிகளை புதுச்சத்திரம் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)