/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_177.jpg)
சிதம்பரம் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் சனிக்கிழமை சிதம்பரம் அருகே உள்ள சி. தண்டேஸ்வர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் (73) என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை அறிந்த சிதம்பரம் இருப்புப்பாதை காவல்துறையினர் 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அதில் உள்ள மருத்துவ உதவியாளர்கள் வந்து சோதனை மேற்கொண்ட போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
பின்னர் இருப்புப்பாதை காவல்துறையினர் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில் இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்றும் கோவையிலிருந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு ரயிலில் வரும் இவரது மனைவியை அழைத்து வர சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து ரயில் மூலம் மயிலாடுதுறை செல்வதற்கு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இது குறித்து இருப்பு பாதை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)