ADVERTISEMENT

தொண்டனுக்கு குடை பிடித்த எம்.எல்.ஏ...!

03:12 PM Nov 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் வெளியே செல்லும்போது வெயிலோ மழையோ வந்தால் குடை பிடிப்பதற்காக உதவியாளர்கள் வைத்துக் கொள்வது ஒருபக்கம். மற்றொரு பக்கம் தலைவருக்கு நான் குடை பிடிப்பேன் என்று அடம்பிடித்து தொண்டர்கள் குடை பிடிப்பதும் வழக்கமாக உள்ளது. இப்படியான ஒரு சமூகத்தில்தான் மாற்றங்களும் நடக்கிறது.

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வது நகர மாநாடு நேற்று நடந்து முடிந்த நிலையில், மாலையில் சின்னப்பா பூங்கா அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ சின்னத்துரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கார்மேகம் சூழ்ந்து வந்தது. வேகமாகக் கூட்டம் நடந்து முடியும் போது மழையும் தொடங்கியது. திறந்தவெளி மேடையில் நகரக்குழு உறுப்பினர் ஜெகன் நன்றியுரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நன்றியுரை ஆற்றும் ஜெகன் நனைவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ சின்னத்துரை இருக்கையிலிருந்து எழுந்து வந்து ஜெகனுக்கு குடை பிடித்து நின்றார்.

இந்தக் காட்சியை சுற்றிநின்ற மக்கள் வியப்பாகப் பார்த்தனர். 'தலைவருக்குத் தொண்டன் குடை பிடிக்கும் காலத்தில் ஒரு தொண்டருக்குத் தலைவர் குடை பிடிக்கிறார். இது தான் எளிமை' என்று பேசிக்கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT