ADVERTISEMENT

ஆற்று சுழலில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிர் இழப்பு!

04:19 PM Aug 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகர பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். இவரது குடும்பத்தினர் தங்களது உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்ட அரகண்டநல்லூர் அருகிலுள்ள வீரமடை கிராமத்தின் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள குல தெய்வக் கோவிலான அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளனர். அந்த குல தெய்வத்தை உற்றார், உறவினர்கள், அங்காளி , பங்காளிகளுடன் வந்து வழிபாடு செய்வதற்காக கும்பகோணத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டு வந்துள்ளனர். சேதுராமன் குடும்பத்தினர் வரும் வழியில் திருக்கோவிலூரில் காலை உணவை முடித்துக் கொண்டு அய்யனார் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து உள்ளனர்.

அடுத்து அய்யனாருக்கு பூஜை செய்வதற்கான பொருட்களுடன் படையில் போடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது பெண்களும் பெரியவர்களும் பொங்கல் வைக்கும் பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சேதுராமன் மகன் அவினாஷ்(18) செந்தில் என்பவரது மகன் ஆகாஷ்(17) ஆகிய இரு இளைஞர்களும் கோவிலுக்கு அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது திடீரென இரண்டு பேரும் ஆற்றுச் சுழலில் சிக்கி கொண்டு கூச்சலிட்டு கத்தி சத்தம் போட்டுள்ளனர். இதைக் கேட்ட அங்கிருந்த சேதுராமன் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் இருந்த அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு ஓடியுள்ளனர்.

சுழலில் சிக்கித் தவித்த 2 வாலிபர்களையும் மீட்டு உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட மகிழ்ச்சியாக வந்த சேதுராமன் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து சேதுராமன் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்கள் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருக்கோவிலூர் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT