தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக இருக்கிறது. தற்போது அந்த கோவிலுக்கு ஒரு ஆபத்து வந்துள்ளது.

Advertisment

thanjai big temple

தொல்லியல் துறையின் அறிவுறுத்தலின்படி, பெரியகோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு போர் போடக்கூடாது, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அது 216 அடி மற்றும் ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள பெரியகோவிலின் கட்டுமானத்தை பெரிய அளவில் பாதிக்கும். ஆனால் தற்போது அங்கு ராஜராஜசோழன் சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள பூங்காவை பராமரிப்பதற்காக போர் போடப்பட்டுள்ளது.

Advertisment

தஞ்சை மாநகராட்சி சார்பாக 500 அடி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. நேற்றும் பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ராஜராஜசோழன் சிலை உள்ள பூங்கா மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவிலுள்ள மரங்கள் மற்றும் செடிகள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது. அதனால்தான் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரிடமும் அனுமதி பெறவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் கம்பீரமாக இருக்கும் சிறந்த கட்டுமானம். உலக மரபுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்டுவரும், சோழர்கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சிறப்பு. அதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.