ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

05:59 PM Nov 24, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த குளித்தலை கடம்பர் கோவில் தெற்கு மணவாள தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது மகன்கள் ஆசாத், சாதிக் இருவரது வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டபோது அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் குளித்தலை பெரிய பாலம் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் அவரிடமிருந்து 105 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

இதில் சாதிக் வழக்கறிஞர் படிப்பு முடித்துள்ளார். புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் தோட்டத்து வீட்டின் உரிமையாளர் ஜாபருல்லா திமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. குளித்தலையில் உள்ள தோட்டத்து வீட்டில் குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT