/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmk-women-counsellor.jpg)
கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (வயது 42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) பொறுப்பு வகித்து வருகிறார். அதே சமயம் இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் வந்த அவர் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதியம் கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில்தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணத்துடன் சடலமாக ரூபா கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலைக் கைப்பற்றினர். அதனைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)