ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது; 3 லட்சம் கஞ்சா பறிமுதல்!

06:50 PM Dec 15, 2018 | kalaimohan

புதுச்சேரி மேட்டுப்பாளையம் முத்தரையர்பாளையத்தில் கஞ்சா விற்கப்படுவதாக வடக்கு பகுதி எஸ்.பி தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து வடக்கு பகுதி குற்றப்பிரிவு போலீசார் ராஜீ, ராஜவேலு, மூவரசன், ஜெயகுமார் மற்றும் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முத்தரையர் பாளையம் கல்கி கோவில் அருகே ஜீவா தெரு புளியந்தோப்பில் 2 பேர் கஞ்சாவை பொட்டலம் போட்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டவுடன் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் கஞ்சாவையும் கைப்பற்றினர். பின்னர் இருவரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் முத்தரையர்பாளையம் திருநல்லூர் காந்தி தெருவை சேர்ந்த அய்யப்பன்(26), திருவண்ணாமலை சமுத்திர காலனியை சேர்ந்த தர்மன்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் விசாரணையில் தர்மன் திருவண்ணாமலையில் கஞ்சா வியாபாரியாக இருந்ததும், அங்கு சென்று அய்யப்பன் அடிக்கடி கஞ்சா வாங்கிவந்து புதுச்சேரியில் விற்றது தெரியவந்தது. சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து கஞ்சாவை கொண்டுவந்து பொட்டலம் போட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பண்டலும், 40 சிறிய பொட்டலமும், மொத்தம் 1.740 கிலோ கஞ்சாவும், 2 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT