புதுவைபைனான்சியர் கொலை வழக்கில் நான்கு பேர்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி வில்லியனூர் அருகிலுள்ள கோட்டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அப்பகுதியில் வட்டிக்கு கடன் அளித்து வந்த இவர் நேற்று இரவு வில்லியனூர் திரையரங்கில் படம் பார்க்க சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில் தலையில் கல்லால் அடித்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து வில்லியனூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதே ஊரை சேர்ந்த பலருக்கு லட்ச கணக்கில் ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகம்கொண்டிருந்த நிலையில்கொலை நடந்த இடத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா விசாரணை நடத்தினார்.
பின்னர் சடலத்தைகைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தியவிசாரணையில் இந்தக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து ஓட்டுநர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சபரி, சக்தி நடராஜன் என நான்கு பேரை கைது செய்துள்ளனர்.