ADVERTISEMENT

டிடிவி தினகரனிடம் ரூ.31 கோடி அபராதம் வசூலிக்கக்கோரிய வழக்கு! -அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

11:11 PM Mar 17, 2020 | kalaimohan

டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட ரூ. 31 கோடி அபராதத்தொகையை வசூலிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் டிடிவி தினகரன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கு, கடந்த 1998-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை ரூ.31 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன், அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவை வாரியம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு, ரூ.31 கோடி அபராதத்தொகையை அவர். செலுத்தவில்லை. அவருக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அபராதத்தொகையை வசூலிக்க தற்போதுவரை அமலாக்கத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக, தகவல் பெறும் ஆணையத்திடம் அபராதத்தொகை பெறப்பட்டதா? என நம்பர் குறித்து மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

அதுபோல, மத்திய தகவல் பொது ஆணையத்திடமும், அமலாக்கத்துறையிடமும் மனு அளித்தும் 20 வருடங்களாக அபராதத்தொகையைப் பெற எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்தத் தொகையை அமலாக்கத்துறை வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
.
இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை மற்றும் டிடிவி தினகரன் இந்த மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT