ADVERTISEMENT

 ’தேவையில்லாமல் தேன்கூட்டில் கைவைத்தால்....’-டிடிவி தினகரன் எச்சரிக்கை 

10:50 PM Jan 06, 2019 | kalidoss

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் 3 வது சுரங்கத்துக்கு நிலம் எடுப்பதை கண்டித்து சேத்தியாத்தோப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் ஞாயிறு இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கே.எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்ட பேசியதாவது:
’’இங்கு நடக்கும் கூட்டம் அரசியலுக்காக ஓட்டுக்காக இல்லை. விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் எண்ணத்தில் நடத்தப்படுகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஜெயலலிதா மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழகத்தில் காட்டாட்சி நடத்தி வருகிறார்கள்.

சமூகத்தின் வாழ்வாதாரம் விவசாயம்தான். மத்திய அரசு விவசாயத்தை குறிவைத்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. என்எல்சி தொடங்கும் காலத்தில் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை எடுத்தது. இதில் இன்னும் 20 ஆயிரம் ஏக்கர் மீதி உள்ளது அதனை பயன்படுத்தினால் இன்னும் 25 ஆண்டுகளுக்கு நிலக்கரி வெட்டி எடுக்கலாம். என்எல்சி நிர்வாகம் நிலக்கரி மின்சாரத்திற்கு மாற்றாக சூரிய மின்சாரம் காற்றாலை மின்சாரம் தயாரிக்கலாம் . ஆனால் விவசாயத்திற்கு உடலுறுப்பு மாற்று உண்டா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், என்எல்சி நிர்வாகத்தால் இந்த பகுதியில் இருந்த பத்தடியில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 600 அடிக்கு சென்றுள்ளது. இந்தப் பகுதியிலும் ஸ்டெர்லைட்டை போல் போராட்டத்தை உருவாக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். தேவையில்லாமல் தேன்கூட்டில் கைவைத்தால் சாது மிரண்டால் காடு தாங்காது எனவே என்எல்சி நிர்வாகம் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் என்எல்சி நிர்வாகத்தை இழுத்து மூடும் நிலை ஏற்படும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT