ADVERTISEMENT

நாகையில் சுனாமி நினைவேந்தல் பேரணி!

11:41 AM Dec 26, 2018 | rajavel




ADVERTISEMENT

14 ஆண்டுகளுக்கு முன்பு இதே டிச-26 அன்று காலை சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்தோனேஷியாவில் தொடங்கி ஆசிய நாடுகள் பலவற்றை தாக்கி அழித்தது.

ADVERTISEMENT


தமிழகத்தில் நாகை மாவட்ட கடலோர கிராமங்கள் இதனால் முற்றிலும் நிலை குலைந்தது. கிருஸ்துமசுக்கு அடுத்த நாளான அன்று பேரதிர்வாக இது அமைந்தது. ஆயிரக்கணக்கான உயிர்கள் நொடிகளில் பறிபோனது.

அதன் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் நாகை மாவட்டத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் உணர்வெழுச்சியோடு அனுசரிக்கப்பட்டது.

நாகையில் நடைபெற்ற அமைதி பேரணியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஜயகுமார், சார் ஆட்சியர் கமலேஷ் கிஷோர், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், வழக்கறிஞர் தங்க.கதிரவன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT