ADVERTISEMENT

நகை கொள்ளையன் முருகனின் டெக்னீக்...அதிர்ச்சியில் போலீஸார்!

06:40 PM Oct 10, 2019 | Anonymous (not verified)

அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அருகே நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றன. ஆனால் சுரேஷ் தப்பிய நிலையில், மணிகண்டன் காவல்துறையிடம் சிக்கினார். சுரேஷை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதை அடுத்து திருச்சியில் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான தனிப்படை பிரிவு செங்கம் நீதிமன்றத்திற்கு விரைந்து சென்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு மோசடியில் தேடப்படும் முகமது ரபி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோரின் புகலிடம் பெங்களூருதான்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அதுபோலவே, லலிதா ஜுவல்லரி கொள்ளையின் கேங் லீடர் முருகனின் புகலிடமும் பெங்களூருதான். ஏற்கனவே அவனைப் பிடித்தவர் ஹரிசேகரன் என்ற போலீஸ் அதிகாரி. கர்நாடக உயரதிகாரியான இவர் தமிழ்நாட்டின் பெரம்பலூர்க்காரர். அப்போது கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகளை தமிழக போலீசாரிடம் தந்துள்ளார். கார் டிரைவிங்கில் படுகில்லாடியான முருகன், ரேஸ்கார் ரேஞ்சுக்கு வண்டியை விரட்டி ஓட்டுவதில் கெட்டிக்காரன் என்பதால், பல சந்தர்ப்பங்களில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்துள்ளான். கொள்ளையடிக்கும் நகைகளை ஹைதராபாத்தை சேர்ந்த கமல்நாத் ஜெயின் என்ற மார்வாடி மூலம் உருக்கி, உருமாற்றி, சிக்கிக்கொள்ளாமல் விற்பனை செய்வது முருகனின் டெக்னிக். அந்த ஜெயின் மீதும் போலீசின் பார்வை பதிந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT