ADVERTISEMENT

சமூக இடைவெளி பொதுமக்களுக்கு மட்டும்தானா? அதிகாரிகளுக்கு இல்லையா?

11:35 AM May 11, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவரவர் வீட்டிலேயே தனிமையில் இருங்கள், தனித்து இருங்கள், சமூக இடைவெளியோடு இருங்கள் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள் கொடுக்கும் போது கூட சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், என்று தொடர்ந்து தமிழக அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறது.


நோய்த் தொற்று தற்போது மிக வேகமாகத் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் எல்லோரும் சமூக இடைவெளியோடு இருக்கிறார்கள்.

ஆனால், கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் சமூக இடைவெளி இல்லாமல் சால்வை போட்டு, சமூக இடைவெளி என்றால் எவ்வளவு என்று கேள்வி கேட்கும் படி இருந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லால்குடியை அடுத்த பூவாளுரில் ஏழைகள் 100 பேருக்கு தனியார் அமைப்பு நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் லால்குடி ஆர்.டி.ஓ. ராமன், காவல்துறை இன்ஸ்பெக்டர் அழகேசன், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளிட்டு நின்றனர். ஆனால் நிவாரணப் பொருட்கள் நிகழ்ச்சியில் கூட சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விருந்தினருக்குச் சால்வை போட்டனர்.

பொதுமக்களுக்கு அதிகாரிகள் தொடர்ச்சியாக அறிவுரை சொல்லுகிறார்கள். அதிகாரிகள் இந்த மாதிரியான நிகழ்ச்சியில் தான் சமூக இடைவெளியையும், நோயின் தாக்கத்தைக் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT