
திருச்சி மாவட்டம் நாகநல்லூர் காட்டுக் கொட்டகை பகுதியைச் சேர்ந்த17 வயது சிறுமிக்கும், ஒட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி குழந்தைகள் நல அலுவலர், உப்பிலியாபுரம் பயிற்சி டி.எஸ்.பி. விக்னேஷ்ஆகியோர் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 18 வயது நிறைவடைந்தவுடன் திருமணம் செய்துவைப்பதாக பெற்றோர் உறுதியளித்தனர். திருச்சி அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)